உணர்வு
மயங்கிய நிலையில்,
மருத்துவ பரபரப்பு,
உன்னுள் நான்,
அறிந்த தருணம்.....
கண் திறக்க,
கால் உதைக்க,
வலியில் உவகை
கொண்ட தருணம்........
எமன் வாயிலில் நீ!
கரு வாயிலில் நான்!
கண்ணீர் அழுகை,
கண்ட தருணம்.......
மனம் அறிந்து,
பசி அறிந்து,
குருதி உணவை
ஈண்ட தருணம்.......
கல் தடுக்கி,
கால் தடுக்கி,
மண்ணில் நின்று
விண்வென்ற தருணம்.......
கருவறை மறந்து,
வகுப்பறை நுழைந்து,
தனியாய் தவித்து
நின்ற தருணம்.....
தவறுகள் இழைத்து,
தலை குனிந்து,
வாழ்க்கை பாடம் -
கற்பித்த தருணம்.........
தன் இணையை
துணையாய் எண்ணி
ஓர விழி,
பார்த்த தருணம்......
கொடுமைகள்,
குற்றங்கள்,
சதிகள்,
வாய் மூடி
வெகுண்ட தருணம்.......
புது உறவுகள்,
புது கடமைகள்,
புது உவகைகள்,
மாங்கல்ய தருணம்....
வாழ்வே துயரமாய் ,
மரணமே வரமாய்,
வாழும் சிலர்........
தெரிந்த தருணம்......
காலை மாலை,
இன்பம் துன்பம்....
வெற்றி தோல்வி....
புரிந்த தருணம்.......
தவறிழைத்தால் தமையனாய்,
தனிமையில் தோழனாய்,
கருணையில் அன்னையாய்,
கண்டிப்பில் தகப்பனாய்,
பொறுமையில் பெUமையாய்,
புன்சிரிப்பில் ஆனந்தமாய்,
கண்ணீரில் கUமேகமாய் ,
குறும்பில் கண்ணனாய்,
என்னுள் வாழும்,
என்னவனே !
எனக்கானவனே!
கோபத்தில் எரிமலையாய்,
துக்கத்தில் மெழுகாய்,
தூக்கத்தில் கதாநாயகனாய்,
என்னை என்னுள்ளே,
எனக்காய் உணரவைக்கும்,
என் இனியவனே!
நீ தான்.....
நீ இன்றி நான் இல்லை......
நீ இன்றி
ஜடம் ஆவேன்
யார் நீ.......?
'என் உணர்வு'