உணவே மருந்து
வளர்ந்து வரும் நவ நாகரிக சமுதாயத்தில் மக்கள் அனைவரும் துரித உணவுப் பொருட்களை நாடிச் செல்கின்றனர். அவ்வாறு செய்வதால் பல்வேறு உடல் நலக்கோளாறுகள் புதிதாக உருவாகி வருகின்றது. அதற்காக நாம் அனைவரும் மருத்துவனையை நாடிச் செல்கின்றோம். மருத்துவர்கள் நம் பாரம்பரிய உணவுப் பழக்க வழக்கங்களை பின்பற்ற அறிவுரை கூறாமல் ஆங்கில மருந்தினை பரிந்துரைக்கின்றனர். ஆனால் நம் உணவுப் பழக்கவழக்கங்களை மாற்றினால் மட்டுமே எந்த விதமான நோய்களும் வராது என்று உணர்ந்து கொள்ள வேண்டும். ஆகையால் நாம் துரித உணவுப் பொருட்களை தவிர்த்து பாரம்பரிய உணவுப் பொருட்களான முளைகட்டிய தானிய வகைகள், தயிர் உபயோகப்படுத்துவோம்.
தயிர் மற்றும் முளைகட்டிய தானிய உணவுப் பொருட்களில் PUROBIOTIC
நுண்ணுயிரிகள் இருக்கின்றன. இந்த PUROBIOTIC
நுண்ணுயிர்
1. என்றும் இளமையாக இருக்க உதவுகின்றது.
2. நம் உணவு செரிமான குழாயில் நோய் உண்டாக்க கூடிய நுண்ணுயிரிகளை அழிக்கக் கூடிய தன்மை கொண்டது.
3. அல்சர், வயிற்றுப்போக்கு, காலரா போன்றவற்றை குணப்படுத்தும் தன்மை கொண்டதாகவும் இருக்கிறது.
"நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்"
- அதனால் நாம் நோயின்றி வாழ நம் பாரம்பரிய உணவை நாடிச் செல்வோம்.